சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   172
Zoom In NormalZoom Out


முன்னிய நெறித்தே

12 'பின்பனிதானும் உரித்து' என மொழிப

13 'இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும்' என்மனார் புலவர்

14 திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே;
நிலன் ஒருங்கு மயங்குதல் இற்றென மொழிப
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே

15 உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

16 புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை,-
தேரும் காலை,-திணைக்கு உரிப்பொருளே

17 'கொண்டு தலைக்கழிதலும், பிரிந்து அவண் இரங்கலும்,
உண்டு' என மொழிப, 'ஓர் இடத்தான'

18 கலந்த பொழுதும் காட்சியும் அன்ன

19 முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே

20 தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை,
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ,
அவ் வகை பிறவும் கரு' என மொழிப

21 எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
அந் நிலம் பொழுதொடு வாராஆயினும்,
வந்த நிலத்தின் பயத்த ஆகும்

22 பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய-
திணைதொறும் மரீஇய, திணை நிலைப் பெயரே

23 ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்;
ஆவயின்