வரூஉம் கிழவரும் உளரே
24 ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை,
ஆனா வகைய திணை நிலைப் பெயரே
25 'அடியோர் பாங்கினும், வினைவலர் பாங்கினும்,
கடிவரை இல; புறத்து' என்மனார் புலவர்
26 ஏவல் மரபின் ஏனோரும் உரியர்;
ஆகிய நிலைமை அவரும் அன்னர்
27 ஓதல், பகையே, தூது, இவை பிரிவே
28 அவற்றுள்,
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.
29 தானே சேறலும், தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும், வேந்தன் மேற்றே
30 மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையான்,
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்,
இழைத்த ஒண் பொருள் முடியவும், பிரிவே
31 மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே
32 மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப
33 உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான.
34 வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே
35 பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே
36 உயர்ந்தோர் பொருள்வயின்
|