சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   174
Zoom In NormalZoom Out


ஒழுக்கத்தான.

37 முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை

38்திணை மருங்கினும், மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான

39 தன்னும் அவனும் அவளும் சுட்டி,
மன்னு நிமித்தம், மொழிப் பொருள் தெய்வம்,
நன்மை, தீமை, அச்சம், சார்தல், என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ,
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்,
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்,
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய

40 ஏமப் பேரூர்ச் சேரியும், சுரத்தும்,
தாமே செல்லும் தாயரும் உளரே

41 அயலோர் ஆயினும், அகற்சி மேற்றே

42 தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்,
போக்கற் கண்ணும், விடுத்தற் கண்ணும்,
நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்,
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்,
நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை,
'அழிந்தது களை' என மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன்