திறத்தோடு
என்று இவை எல்லாம், இயல்புற நாடின்,
ஒன்றித் தோன்றும் தோழி மேன.
43 'பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்,
ஊரது சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்,
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்து எதிர் கூறி விடுப்பினும், ஆங்கத்
தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்,
கண்டோர் மொழிதல் கண்டது' என்ப.
44 ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்,
இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்
கடைக் கொண்டு பெயர்த்தலின் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
அப் பால் பட்ட ஒரு திறத்தானும்,
நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப்
|