பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்,
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்,
தூது இடையிட்ட வகையினானும்,
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்,
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்,
பாசறைப் புலம்பலும், முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்,
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்,
பரத்தையின் அகற்சியின் பரிந்தோள் குறுகி
இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு
உரைத் திற நாட்டம் கிழவோன் மேன
45
எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே
46
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்
47
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே
48 'மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும்' என்ப.
49
உள்ளுறை உவமம், ஏனை உவமம், எனத்
தள்ளாது ஆகும், திணை உணர் வகையே
50
'உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக்
கொள்ளும்' என்ப குறி அறிந்தோரே
51
'உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக'

|