59
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்,
வெட்சிதானே குறிஞ்சியது புறனே;
உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே
60
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்
61
படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,
புடை கெடப் போகிய செலவே, புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை என
வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும்
62
மறம் கடைக்கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே
63
வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்; உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தை, வேம்பே, ஆர், என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி, வயவர் ஏத்திய
ஓடாக் கழல்-நிலை உளப்பட ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
மாயோன்

|