மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்
ஆர் அமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும்
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்
வரு தார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தலென்று
இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை, வாழ்த்தல், என்று
இரு-மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே
64
வஞ்சிதானே முல்லையது புறனே;
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தகத் தலைச் சென்று, அடல் குறித்தன்றே
65
இயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமையானும்,
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழியானும்,
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்,
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்
குன்றாச்

|