சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   180
Zoom In NormalZoom Out


சிறப்பின் கொற்ற வள்ளையும்,
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே

66 'உழிஞைதானே மருதத்துப் புறனே;
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும்' என்ப.

67 அதுவேதானும் இரு நால் வகைத்தே

68 கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்,
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்,
தொல் எயிற்கு இவர்தலும்,தோலது பெருக்கமும்,
அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய
புறத்தோன் அணங்கிய பக்கமும், திறல் பட
ஒரு தான் மண்டிய குறுமையும், உடன்றோர்
வருபகை பேணார் ஆர் எயில் உளப்படச்
சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே

69 'குடையும், வாளும், நாள்கோள்; அன்றி,
மடை அமை ஏணிமிசை மயக்கமும்; கடைஇச்
சுற்று அமர் ஒழிய வென்று கைக் கொண்டு,
முற்றிய முதிர்வும்; அன்றி, முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்; மற்று அதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்;
நீர்ச் செரு வீழ்ந்த பாசியும்; அதாஅன்று,
ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்;
மதில்மிசைக்கு இவர்ந்த பக்கமும் மேலோர்
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்;
வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத்
தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ,