சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   181
Zoom In NormalZoom Out


வகை நான் மூன்றே துறை' என மொழிப

70 'தும்பைதானே நெய்தலது புறனே;
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று' என்ப

71 கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்,
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையோடு
இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்றே

72 தானை, யானை, குதிரை, என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்;
வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி, ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார் நிலை; அன்றியும்,
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்;
ஒருவன், ஒருவனை, உடை படை புக்குக்
கூழை தாங்கிய எருமையும்; படை அறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத்தானும்;
களிறு எறிந்து எதிர்த்தோர் பாடும்; களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும்; வாள் வாய்த்து,
இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்;
செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ,
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்;
பல் படை ஒருவற்கு உடைதலின், மற்றவன்
ஒள் வாள் வீசிய நூழிலும்; உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.

73 'வாகைதானே பாலையது புறனே;
தா இல் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்' என்ப