'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது' என்மனார் புலவர்.
75
கூதிர், வேனில், என்று இரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்; தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;
ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;
பெரும் பகை தாங்கும் வேலினானும்,
அரும் பகை தாங்கும் ஆற்றலானும்,
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து,
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;
ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;
பகட்டினாலும்

|