ஆவினானும்,
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;
கடி மனை நீத்த பாலின்கண்ணும்;
எட்டு வகை நுதலிய அவையத்தானும்;
கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;
இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்;
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்;
அருளொடு புணர்ந்த அகற்சியானும்;
காமம் நீத்த பாலினானும் என்று
இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே
76
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே
77
மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்
புண் கிழித்து முடியும் மறத்தினானும்,
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,
இன்னன் என்று இரங்கிய மன்னையானும்
"இன்னது பிழைப்பின் இது ஆகியர்!" எனத்
துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,
இன் நகை மனைவி பேஎய்ப் புண்ணோன்-
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,
நீத்த கணவன்-தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி ஆஞ்சியானும்,
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்,
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,
ஈர் ஐந்து ஆகும்' என்ப, பேர் இசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல்-மயக்கத்தானும்,
தாமே எய்திய தாங்க அரும் பையுளும்,
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்

|