சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   184
Zoom In NormalZoom Out


செல்வோர் செப்பிய மூதா னந்தமும்,
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பிய முதுபாலையும்,
கழிந்தோர் தேஎத்து அழி படர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,
காதலி இழந்த தபுதார நிலையும்,
காதலன் இழந்த தாபத நிலையும்,
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
சொல் இடையிட்ட பாலை நிலையும்,
மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்
பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,
நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே

78 பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;
நாடும் காலை, நால் இரண்டு உடைத்தே

79 'அமரர் கண்முடியும் அறு வகையானும்,
புரை தீர் காமம் புல்லிய வகையினும்,
ஒன்றன் பகுதி ஒன்றும்' என்ப

80 வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,
முன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை,
வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே

81 'காமப் பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும்' என்மனார் புலவர்

82 குழவி மருங்கினும் கிழவது ஆகும்