சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   185
Zoom In NormalZoom Out


'ஊரொடு தோற்றமும் உரித்து' என மொழிப
'வழக்கொடு சிவணிய வகைமையான'

84 மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே

85 கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

86 கொற்றவள்ளையும் ஓர் இடத்தான

87 'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலின் நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉம்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப

88 தாவில் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;
கூத்தரும், பாணரும்,