சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   186
Zoom In NormalZoom Out


பொருநரும், விறலியும்,
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;
சிறந்த நாளினில் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்;
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்;
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்;
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,
நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி,
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே