சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   187
Zoom In NormalZoom Out


இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்,
காமக் கூட்டம் காணுங் காலை,
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.

90 ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப,
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே.

91 சிறந்துழி ஐயம் சிறந்தது' என்ப
'இழிந்துழி இழிபே சுட்டலான.

92 வண்டே, இழையே, வள்ளி, பூவே,
கண்ணே, அலமரல், இமைப்பே, அச்சம், என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
நின்றவை களையும் கருவி' என்ப.

93 நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.

94 குறிப்பே குறித்தது கொள்ளுமாயின்,
ஆங்கு அவை நிகழும்' என்மனார் புலவர்.

95 பெருமையும் உரனும் ஆடூஉ மேன.

96 சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய' என்ப.

97 வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்,
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்,
நோக்குவ எல்லாம் அவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்காடு, என்று அச்
சிறப்புடை மரபினவை களவு' என மொழிப.

98 முன்னிலை ஆக்கல், சொல்வழிப்படுத்தல்,
நல் நயம் உரைத்தல், நகை நனி உறாஅது
அந் நிலை