அறிதல், மெலிவு விளக்குறுத்தல்,
தன் நிலை உரைத்தல், தெளிவு அகப்படுத்தல், என்று
இன்னவை நிகழும்' என்மனார் புலவர்.
99
மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்,
இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல்,
நீடு நினைத்து இரங்கல், கூடுதல் உறுதல்,
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்,
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்,
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்,
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும், தோழி
குறை அவள் சார்த்தி மெய்யுறக் கூறலும்,
தண்டாது இரப்பினும், மற்றைய வழியும்,
சொல் அவள் சார்த்தலின் புல்லிய வகையினும்,
அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின்
கேடும் பீடும் கூறலும், தோழி
நீக்கலின் ஆகிய நிலைமையும், நோக்கி
மடல்மா கூறும் இடனுமார் உண்டே.
100 பண்பிற் பெயர்ப்பினும், பரிவுற்று மெலியினும்,
அன்புற்று நகினும், அவள் பெற்று மலியினும்,
ஆற்றிடை உறுதலும், அவ் வினைக்கு இயல்பே.
101
'பாங்கன் நிமித்தம்
|