பன்னிரண்டு' என்ப.
102
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.
103
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
104
முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே
105
இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்;
காணா வகையில் பொழுது நனி இகப்பினும்;
தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்,
காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி,
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்;
புகாஅக் காலை புக்கு எதிர்பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்;
வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்;
தாளாண் எதிரும் பிரிவினானும்;
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்;
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரை தீர் கிளவி புல்லிய எதிரும்,
வரைவு உடன்படுதலும்; ஆங்கு அதன் புறத்துப்
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇக்
கிழவோள் மேன' என்மனார் புலவர்.
106 காமத் திணையின் கண் நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்,
குறிப்பினும் இடத்தினும் அல்லது, வேட்கை
நெறிப்பட வாரா, அவள்வயி னான.
|