காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உள' என மொழிப
108
சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்,
அல்ல கூற்றுமொழி அவள் வயினான.
109 மறைந்து அவன் காண்டல், தன் காட்டுறுதல்,
நிறைந்த காதலில் சொல் எதிர் மழுங்கல்,
வழிபாடு மறுத்தல், மறுத்து எதிர்கோடல்,
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்,
கைப்பட்டுக் கலங்கினும், நாணு மிக வரினும்,
இட்டுப் பிரிவு இரங்கினும், அருமை செய்து அயர்ப்பினும்,
வந்தவழி எள்ளினும், விட்டு உயிர்த்து அழுங்கினும்,
நொந்து தெளிவு ஒழிப்பினும், அச்சம் நீடினும்,
பிரிந்தவழிக் கலங்கினும், பெற்றவழி மலியினும்,
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்,
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்,
மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்,
உயிராக் காலத்து உயிர்த்தலும், உயிர் செல
வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்,
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்,
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்
அருமை சான்ற நால் இரண்டு வகையின்
பெருமை சான்ற இயல்பின்கண்ணும்,
பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்,
கையறு
|