தோழி கண்ணீர் துடைப்பினும்,
வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்,
குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்,
வரைவு தலைவரினும், களவு அறிவுரினும்,
தமர் தன் காத்த காரண மருங்கினும்,
தன் குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்,
வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்,
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவும் உளவே ஓரிடத் தான.
110
வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்,
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்,
'உரை' எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்,
தானே கூறும் காலமும் உளவே.
111
உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' எனத்
தொல்லோர் கிளவி புல்லி நெஞ்சமோடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்,
தா இல்

|