நல் மொழி கிழவிக் கிளப்பினும்,
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.
112
நாற்றமும், தோற்றமும், ஒழுக்கமும், உண்டியும்,
செய் வினை மறைப்பினும், செலவினும், பயில்வினும்,
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது,
பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்;
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்
பெருமையிற் பெயர்ப்பினும், உலகு உரைத்து ஒழிப்பினும்;
அருமையின் அகற்சியும்; 'அவள் அறிவுறுத்துப்
பின் வா வென்றலும்; பேதைமை ஊட்டலும்;
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்;
அஞ்சி அச்சுறுத்தலும்; உரைத்துழிக் கூட்டமோடு
எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயம் செப்பிப்
பொறுத்த காரணம் குறித்த காலையும்;
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும்;
குறைந்து அவள் படரினும்; மறைந்தவள் அருகத்
தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்

|