சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   193
Zoom In NormalZoom Out


கினும்;
நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்;
எண்ணரும் பல் நகை கண்ணிய வகையினும்;
புணர்ச்சி வேண்டினும்; வேண்டாப் பிரிவினும்;
வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்;
புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்;
ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்;
செங் கடுமொழியால் சிதைவுடைத்துஆயினும்;
என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ,
அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்;
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்;
காப்பின் கடுமை கையற வரினும்;
களனும் பொழுதும் வரை நிலை விலக்கிக்
காதல் மிகுதி உளப்படப் பிறவும்;
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி,
அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ,
அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்,
ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்துப்
பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்;
அவள் விலக்குறினும்; களம் பெறக் காட்டினும்;
பிறன் வரைவு ஆயினும்; அவன் வரைவு மறுப்பினும்;
முன்னிலை