அறன் எனப்படுதல் என்று இருவகைப்
புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்;
வரைவு உடன்பட்டோர் கடாவல் வேண்டினும்;
ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்படப்
பாங்குற வந்த நால் எட்டு வகையும்
தாங்கு அருஞ் சிறப்பின் தோழி மேன.
113
களவு அலர்ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும்,
அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும்,
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்,
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்,
காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும்,
தோழியை வினாவலும், தெய்வம் வாழ்த்தலும்,
போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்,
பிரிவின் எச்சத்தும், மகள் நெஞ்சு வலிப்பினும்,
இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்,
இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு
அன்னவை பிறவும் செவிலி மேன.
114
தாய்க்கும் வரையார், உணர்வு உடம்படினே.
115
'கிழவோன் அறியா அறிவினன் இவள்' என,
மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்,
ஐயக் கிளவி அறிதலும் உரித்தே.

|