சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   195
Zoom In NormalZoom Out


'தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை, கிழத்திக்கு இல்லைப்
பிற நீர் மாக்களின் அறிய, ஆயிடைப்
பெய்ந் நீர் போலும் உணர்விற்று' என்ப.

117 காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின்,
தாமே தூதுவர் ஆகலும் உரித்தே.

118 அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்,
களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்;
தான் செலவற்கு உரிய வழி ஆகலான.

119 தோழியின் முடியும் இடனுமாருண்டே.

120 முந் நாள் அல்லது துணை இன்று கழியாது;
அந் நாள் அகத்தும், அது வரைவு இன்றே.

121 பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்,
துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்,
துணையோர் கருமம் ஆகலான.

122 ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்,
தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்.

123 தோழிதானே செவிலியது மகளே

124 சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே

125 குறையுற உணர்தல், முன் உற உணர்தல்,
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல், என
மதியுடம்படுத்தல்