சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   200
Zoom In NormalZoom Out


காமக்கிழத்தி, மனையோள், என்று இவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்;
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்;
அருந் தொழில் முடித்த செம்மல் காலை,
விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்;
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்;
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப்
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்-
எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன.

145 `அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்,
ஏற்றற்கண்ணும்; நிறுத்தற்கண்ணும்;
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
பெருமையின் திரியா அன்பின்கண்ணும்;
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்,
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்;
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்;
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளி வரு நிலையும்;
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி,
இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி,
எதிர்