சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   201
Zoom In NormalZoom Out


பெய்த்து மறுத்த ஈரத்து மருங்கினும்;
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி,
"எங்கையர்க்கு உரை!" என இரத்தற்கண்ணும்;
செல்லாக் காலை, 'செல்க!' என விடுத்தலும்;
காமக்கிழத்தி தன் மகத் தழீஇ,
ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்;
சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி,
அறம் புரி உள்ளமொடு, தன் வரவு அறியாமைப்
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்;
"தந்தையர் ஒப்பர் மக்கள்" என்பதனால்,
அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்;
"கொடியோர் கொடுமை சுடும்!" என ஒடியாது,
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்;
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி,
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
"காதல் எங்கையர் காணின் நன்று என,
மாதர் சான்ற வகையின்கண்ணும்;
தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்;
தன்வயின் சிறைப்பினும்; அவன் வயின் பிரிப்பினும்;
இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்;
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய