தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்;
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை,
காய்தலும் உவத்தலும், பிரித்தலும் பெட்டலும்,
ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்;
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ,-
கிழவோள் செப்பல் கிழவது' என்ப.
146 புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து,
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி,
அன்புறு தக்க கிளத்தல்தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும்.
147
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்,
ஆவயின் நிகழும்' என்மனார் புலவர்.
148 பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த
தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்;
அற்றம் அழிவு உரைப்பினும், அற்றம் இல்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்,
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்,
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும்;
பிழைத்து வந்து இருந்த கணவனை நெருங்கி,
இழைத்

|