புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்,
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்,
பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்,
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்,
காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்
காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்,
இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
பின்னர் வந்த வாயிற்கண்ணும்,
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகை படக் குறித்த கொள்கைக்கண்ணும்,
எண்ணிய பண்ணை, என்று இவற்றொடு பிறவும்
கண்ணிய காமக்கிழத்தியர் மேன.
150 "கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல் இயல் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய.
151 கழிவினும் நிகழ்வினும்

|