சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   206
Zoom In NormalZoom Out


கிழவோட்கும் உரித்தே.

160 களவும் கற்பும் அலர் வரைவு இன்றே

161 அலரின் தோன்றும், காமத்தின் சிறப்பே.

162 கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே.

163 மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை

164 மனைவி முன்னர்க் கையறு கிளவி,
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே.

165 'முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும்' என்மனார் புலவர்.

166 தொல்லவை உரைத்தலும், நுகர்ச்சி ஏத்தலும்,
பல்லாற்றானும் ஊடலின் தணித்தலும்,
உறுதி காட்டலும், அறிவு மெய்ந் நிறுத்தலும்,
ஏதுவின் உரைத்தலும், துணிவு காட்டலும்,
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன.

167 நிலம் பெயர்ந்து உரைத்தல், அவள் நிலை உரைத்தல்,
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய.
ஆற்றது பண்பும், கருமத்து விளைவும்,
ஏவல் முடிவும், வினாவும், செப்பும்,
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்,
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்,
இளையோர்க்கு உரிய கிளவி' என்ப.