சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   207
Zoom In NormalZoom Out


உழைக் குறுந்தொழிலும், காப்பும், உயர்ந்தோர்க்கு
நடக்கை எல்லாம் அவர்கண் படுமே.

170 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
தொன் முறை மனைவி எதிர்ப்பாடுஆயினும்,
மின் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்,
இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனார் புலவர்.

171 'தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து' என மொழிப
'கவவொடு மயங்கிய காலையான'

172 'அவன் சோர்பு காத்தல் கடன்' எனப்படுதலின்,
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்
செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான.

173 எண் அரும் பாசறைப் பெண்ணொடு புணரார்.

174 புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும்.

175 காம நிலை உரைத்தலும், தேர் நிலை உரைத்தலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்,
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்,
செலவு று கிளவியும், செலவு அழுங்கு கிளவியும்,
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய.

176 எல்லா வாயிலும், இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள' என்ப.

177 அன்பு தலைப்பிரிந்த