சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   208
Zoom In NormalZoom Out


கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று' என்மனார் புலவர்.

178 தற் புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல்
எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை
முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே.

179  கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய' என்ப.

180 மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே.

181 குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.

182 துன்புறு பொழுதினும், எல்லாம் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.

183 செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே;
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்.

184  கிழவி நிலையே வினையிடத்து உரையார்;
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்.

185 பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார்' என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான.

186 வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது.

187 வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே.

188 ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும்.

189 யாறும் குளனும் காவும் ஆடிப்
பதி இகந்து நுகர்தலும் உரிய' என்ப.

190 காமம் சான்ற கடைக்