கோட் காலை,
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி,
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
191 தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்,
பாணன், பாடினி, இளையர், விருந்தினர்,
கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர்,
யாத்த சிறப்பின் வாயில்கள்' என்ப.
192 வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை,
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள் இயல் கலி மா உடைமையான.
193 இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே;
அசை திரிந்து இசையா' என்மனார் புலவர்.
194 நோயும் இன்பமும் இரு வகை நிலையின்,
காமம் கண்ணிய மரபிடை தெரிய,
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய,
உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல்
மறுத்து உரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்,
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபின்

|