புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   296
Zoom In NormalZoom Out

அமையும்.
 

போற்றார்ப்பொறுத்தல்  முதலிய   குணங்களையுடையோய்,  பொருந,
வரையாதுகொடுத்தோய்,   வானவரம்ப,   பெரும,   நீ,   புளிப்பினும்
இருளினும்  திரியினும்  இமயமும்  பொதியமும் போன்று நடுக்கின்றிச்
சுற்றமொடு விளங்கி நிற்பாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
 

போற்றார்ப்பொறுத்தல்   முதலாகிய   குணங்களை   அரசியலடைவாற்
கூறுகின்றாராதலின், பூதங்களின் அடைவு கூறாராயினார்.
 

இதனாற்     சொல்லியது, தன்கடற்பிறந்தஞாயிறு தன்கடற்குளிக்கும்
நாடனாதலாற்     செல்வமுடையையாகவென்று     வாழ்த்தவேண்டுவ
தின்மையின், நீடு வாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.
 

(3) உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை

நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரச மிழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்
றவிரா வீகைக் கவுரியர் மருக
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்
பொலங்கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல வுயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற்
செந்தொடை பிழையா வன்க ணாடவர்
அம்புவிட வீழ்ந்