றினதுகோட்டையொத்தன; பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளைதோன்றுவன, நிலையிற் றப்பாத இலக்கத்தையொத்தன; குதிரைகள் எதிரியை எறியும் காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை உடைமையான் மான்முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி உதிரம் உவற்றியுண்ட புலியை யொத்தன; களிறுகள், கதவை முறித்து வெகுண்டு உலாவி நுனைதேய்ந்த வெளியகோட்டையுடைமையான் உயிரையுண்ணும் கூற்றையொத்தன; நீதான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற்றேரின்மேலே பொலிவொடு தோன்றுதலாற் கரிய கடலின்கண்ணே ஓங்கியெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை; அத்தன்மையையாதலால், தாயில்லாத உண்ணாக் குழவிபோல ஒழியாது கூப்பிடும் நின்னைச் சினப்பித்தவருடைய நாடு - எ - று. |