புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   299
Zoom In NormalZoom Out

தன்னுளடக்கிக்     கரக்கினும்    கரக்குமென்பதற்கு  அவ்வடிவுதான்
எல்லாப்  பொருளையும்  தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் கூற்றிலே
மறையினும் மறையுமென்று உரைப்பினும் அமையும்.

நீரறவறியாக் கரகம் - கங்கையென்பாருமுளர்.

அக்கறை,     அவ்வுரு,   அப்பிறை   என  நின்ற   எழுவாய்கட்கு
நுவலவும்படும்,    கரக்கினுங்கரக்கும்,   ஏத்தவும்படும்   என   நின்ற
பயனிலைகளை நிரலே கொடுக்க. இவ்வெழுவாய்களையும் பிறவற்றையும்
அருந்தவத்தோற்கென்னும் நான்காவதனோடு முடிக்க.

ஏமமாகிய  (11)  அருந்தவத்தோ  (13)  னென்க; ஏமமாகிய நீரெனினும்
அமையும்.

அணியலுமணிந்தன்றென்பது,  ‘‘உண்ணலு  முண்ணேன்’’  (கலித்.  23)
என்பது போல நின்றது.

பதினெண்கணங்களாவார்     :   தேவரும்   அசுரரும்   முனிவரும்
கின்னரரும்    கிம்புருடரும்   கருடரும்   இயக்கரும்   இராக்கதரும்
கந்தருவரும்  சித்தரும்  சாரணரும்  வித்தியாதரரும் நாகரும் பூதமும்
வேதாளமும்  தாராகணமும்  ஆகாசவாசிகளும்  போக பூமியோருமென
இவர்; பிறவாறும் உரைப்பர்.

இப்பெரியோனை    மனமொழி   மெய்களான்   வணங்க   அறமுதல்
நான்கும் பயக்கு மென்பது கருத்தாகக் கொள்க.

(2) மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்