று உரைப்பாருமுளர். செஞ்ஞாயிற்றுக் கவினை (16) யென்றதுணையும் மன்னவன் புகழும், ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடென (19) ஒன்னார் நாடழிபிரங்கலு மோதலான், இது கொற்றவள்ளை (பு. வெ. 43) யாயிற்று. (4)
எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியுமாம். சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலிரும்பொறையைக் கண்டஞான்று நின் உடம்பு பெறுவாயாகென அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது. (இ - ள்.) எருமைபோலும் வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப் பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்! பெரும! நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தையுடைய னாதலால், நினக்கு ஒரு காரியஞ் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக; அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடு பொருந்தாது நீ காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப்
|