புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   304
Zoom In NormalZoom Out

போலப்  பாதுகாப்பாயாக;  அளிக்கத்தக்க  தொன்று  அக்காவல்; அது
பெறுதற்கரிது, எ - று.

காவலென்றது    (7)    ஆகுபெயர்.    நாடனை   (3)   :   ஐகாரம்
முன்னிலைக்கண் வந்தது. ஓவும், ஓரும் : அசைநிலை.

அருளாவது:   -   ஒன்றின்   துயர்கண்டாற்  காரணமின்றித்தோன்றும்
இரக்கம் (தொல். பொருள். 53, ந.)

அன்பாவது:   -   தன்னாற்   புரக்கப்படுவார்  மேலுளதாகிய  காதல்.
(தொல். பொருள். 53, ந.)

இனி,  ஓகாரத்தைப்  பிரித்து   வினாவாக்கிக் கோப்பெருஞ்சேரலிரும்
பொறையைக்   கண்டஞான்று  நின்னுடம்புபெறுவாயெனத்  தம்முடம்பு
பெற்றமை தோன்ற, நீயோவென வினாவினாராக்கியுரைப்பாருமுளர்.

காவல்   குழவிகொள்பவரினோம்பென்றமையாற்   செவியறிவுறூஉவும்,
அருளும்            அன்பும்           நீக்கி           நீங்கா
நிரயங்கொள்பவரொடொன்றாதென்றமையாற் பொருண்மொழிக்
காஞ்சியுமாயிற்று.

(5) வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட