புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   305
Zoom In NormalZoom Out

துலாக்கோலின்கட்  சமன்வாய்போல ஒருபக்கம் கோடாதொழிக; நினது
படை  குடிமுதலாகிய  கூறுபாடுகள் சிறக்க; போர் செய்தற்கு மாறுபட்ட
பகைவர்  தேயத்தின்கண்ணே நினது கடல்போலும் படை மேல்விழுந்து
உள்புக மிக்குச் சென்று அடர்ந்த புகரினையுடைய சிறுகண்யானையைத்
தடையின்றி  நேரே  ஏவிப் பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய
மதிலரண்  பலவற்றையுங்  கொண்டு  அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட
அழகுபடச்  செய்த  நல்ல  அணிகலங்களைப்பரிசிலர்க்கு வரிசையின்
வழங்கி    நினது    கொற்றக்குடை   முனிவராற்பரவப்படும்   மூன்று
திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க;
பெரும!  நினது  முடி,  மிக்க  நான்கு வேதத்தினையுடைய அந்தணர்
நின்னை  நீடுவாழ்கவென்றெடுத்த கையின்முன்னே வணங்குக; இறைவ!
நினது  கண்ணி,  நின்பகைவரது  நாட்டைச்  சுடும்  பலமணம் நாறும்
புகையுறைத்தலான்  வாடுக; நினது சினம், வெளிய முத்தாரத்தையுடைய
நின்  தேவியருடைய  துனித்த  ஒளியையுடைய  முகத்தின் முன்னர்த்
தணிக;    வென்று    வென்றிமுழுதையும்   வியவாது   நின்மனத்தே
உட்கொண்ட  தணியாத  வண்மையையுடைய  தகுதிமாட்சிமைப் பட்ட
குடுமி!   குளிர்ந்த   சுடரையுடைய   திங்களையொப்பவும்   சுடுகின்ற
ஒளிபொருந்திய    ஒள்ளிய    கதிரையுடைய   ஞாயிற்றையொப்பவும்
நிலைபெறுவாயாக, நீ உலகத்தின்மேல் - எ - று.
 

வடாது    (1)   என்னும்   முற்றுவினைக்குறிப்பைப்   பெயர்ப்படுத்தி,
பனிபடு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன்வடக்கு