புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   308
Zoom In NormalZoom Out

தக வொறுத்தி
வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற்
றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) 

சோழன்   நெய்தலங்கானல்  இளஞ்சேட்   சென்னியை  ஊன்பொதி
பசுங்குடையார் பாடியது. 

(இ - ள்.)  நின்னை    வழிபட்டொழுகுவோரை   விரையஅறிவை;
பிறருடைய   குற்றஞ்சொல்லுவாரது   வார்த்தையைத்  தெளிவாய்;  நீ
மெய்யாக 

மனத்தான்  ஆராய்ந்து   அறுதியிடப்பட்ட  கொடுமையை  ஒருவன்
பாற் காணின், அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து அத்தீமைக்குத்தகத்
தண்டஞ்செய்வை;    வந்து    நின்பாதத்தை    யடைந்து   முன்னே
நிற்பாராயின்,  அவர்  பிழைசெய்வதற்குமுன்  நீ செய்யும் அருளினும்
அருள்    பெரிதாக    அவரைச்செய்யுந்    தண்டமும்    தணிவை;
அமிழ்தத்தைத்  தன்  சுவையால் வென்று உண்ண உண்ண அமையாத
மணங்கமழும்   தாளிப்பையுடைய  அடிசிலை  விருந்தினர்க்கு  மிகுதி
குறைபடாமல்    வழங்கும்    பழிதீர்ந்த   மனைவாழ்க்கையையுடைய
பெண்டிர்    முயக்கத்தால்    மாறுபடுத்தலல்லது    வீரர்   போரால்
மாறுபடுத்தலொழிந்த  இந்திரவிற்போலும் மாலையையுடைய மார்ப! ஒரு
தொழிலைச்   செய்து   பின்   பிழைக்கச்செய்தே   மென்று  கருதாத
செய்கையையும்   சேய்மைக்கண்ணே  விளங்கும்  புகழினையுமுடைய
நெய்தலங்கானலென்னும்  ஊரையுடைய  நெடியோய்!  அணுகவந்தேம்
யாம்; நின் பலகுணங்களையும் புகழ்வேமாக. - எ - று. 

வழிபடுவோரை வல்லறிதியென்றது, அறிந்து அவர்களுக்கு அருள்