புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   310
Zoom In NormalZoom Out

மென்க; ஒழிந்தனவுமன்ன. 

மேலது   துறக்கத்தின்    மேலுமென்பார்,   அதற்கு    மேலதாகிய
ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற்
பிறரஞ்சும் உட்குடைமை. 

அத்தை (23) யும், ஆங்க (25) வும் அசைநிலை. 

குடுமி!   பெரும!  உருவும்  புகழும்  ஆக; ஒருதிறம்  பற்றாதொழிக;
நிற்றிறஞ்   சிறக்க;   பணிக;  இறைஞ்சுக;  வாடுக;  செல்லுக;  பரிசின்
மாக்கட்கு  நல்கி மதியம்போலவும், ஞாயிறுபோலவும் நீ நிலத்தின்மிசை
மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க. 

தேஎத்து   (11)   என்பதனுள்,   அத்தை  அசைநிலையாக்கி,  தேயம்
கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர். 

ஞமன்  (9)  -  யமனெனினுமமையும்.  அடற்புகர்ச் சிறுகண்  யானை
(12)    யென்று   பாடமோதி,   கொலையைச்செய்யும்   புகரையுடைய
யானையெனினும் அமையும். 

ஆகி  (8), ஆகவெனத்  திரிந்துநின்றது;  ஆகியென்பதனைத் திரியாது,
நிற்றிறஞ்   சிறக்க  (10)  என்பதனோடு  இயைத்துரைப்பாரும்  உளர்.
நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது. 

நகர்வலஞ்செயற்குப்     பணியியரென     வீடும்,    ஏந்துகையெதிர்
இறைஞ்சுகவென     அறமும்,    புகையெறித்தலான்    வாடுகவெனப்
பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று. 

இஃது,  இவ்வாறு  செய்கவென  அரசியல்  கூறலிற் செவியறிவுறூஉவும்,
மதியமும்ஞாயிறும்போல மன்னுகவென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று. 

(7) களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
மாமறுத்த மலர்மார்பிற்
றோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலி னல்ல
இல்லவா குபவா லியறேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து