கள் ஆகாயத்தை நிழற்செய்யும் எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம்முடைய கோவாகிய, சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய நெடியோனால் (பி - ம். உயர்ந்தோனால்) உளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளியென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்-எ - று. எங்கோவாகிய குடுமி, பஃறுளியாற்றின் மணலினும் பலகாலம் வாழியவெனக் கூட்டுக. கொடி விசும்பு நிழற்றும் (6) என்பது, சினைவினைப்பாற்பட்டு எங்கோவென்னும் (7) முதலொடு முடிந்தது; கொடியால் விசும்பு நிழற்று மென்றுரைப்பினும் அமையும்; மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் களிற்றினையுமென மாறிக் கூட்டுவாருமுளர். தங்கோச் செந்நீர்ப் பசும் பொனென்பதற்குத் (9 - 10) தமதரசாட்சியினது செவ்விய நீர்மையாற் செய்த பசும்பொனென்பாருமுளர். முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றானென்ற வியப்பால், நெடியோ னென்றாரென்ப. யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று; அன்றி, முன்னீரென்றோதி, நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப. பிணியுடையீரும் புதல்வர்ப்பெறாதீருமென்னும் முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பனமாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய்வந்து, நும்மரண் சேர்மினென்னும் முன்னிலைவினையான் முடிதல், ‘‘செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்’’ என்னும் அதிகாரப்புறனடையாற் கொள்ளப்படும். (10)
வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி யத்
|