புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   313
Zoom In NormalZoom Out

செய்வையென்பதாம். 

பெரிது (6)  என்பது  வினையெச்சக்  குறிப்பாகலின், ஆகவென  ஒரு
சொல்     வருவித்து      உரைக்கப்பட்டது.     பண்டையிற்பெரிது
தணிதியென்பதற்கு   நீ   பண்டு   செய்த  கோபத்தினும்  பெரிதாகத்
தணிதியென்றுரைப்பினும்       அமையும்.      அடப்பட்டமையாக
அமிழ்துபோலும் அடிசில் (7) என்றுரைப்பினும் அமையும். 

நெடியோய்! பல ஏத்துவேமாக எய்தவந்தனமெனக்கூட்டுக. 

(11) அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்

குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
எனவாங்
கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. 

திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை. 

சேரமான்     பாலைபாடிய     பெருங்கடுங்கோவைப்     பேய்மகள்
இளவெயினி (பி - ம். இளவினி) பாடியது. 

(இ - ள்.) ஐய  மயிரையுடைய   திரண்ட   முன்கையினையும் தூய
ஆபரணத்தையுமுடைய   பேதைமகளிர்   வண்டலிழைத்த  சிற்றிற்கட்
செய்த பாவைக்கு வளைந்த கோட்டுப்பூவைப் பறித்துக் குளிர்ந்த ஆன்
பொருந்தத்து   நீரின்கட்   பாய்ந்து   விளையாடும்   வானைமுட்டிய
புகழினையும்   வென்றியையுமுடைய   கருவூரின்கட்  பாடுதற்கமைந்த
வெற்றியையுடைய அரசனும், பகைதொறும் வெம்மையையுடைய