புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   314
Zoom In NormalZoom Out

அரணை   அழித்துவலியோடு    எதிர்ந்தவருடைய புறக்கொடையைப்
பெற்றான்;  அப்புறக்கொடையைப்  பெற்ற வலிய அரசனது வீரத்தைப்
பாடிய   பாடினியும்,  தோற்றப்  பொலிவுடைய  சிறந்த  பலகழஞ்சாற்
செய்யப்பட்ட    நன்மையையுடைய    அணிகலத்தைப்    பெற்றாள்;
அவ்வணிகலத்தைப்  பெற்ற விறலிக்கு முதற்றானமாகிய குரலிலே வந்து
பொருந்தும்   அளவையுடைய  பாட்டைவல்ல  பாணனும்,  விளங்கிய
தழலின்கண்ணே   ஆக்கப்பட்ட   பொற்றாமரையாகிய  வெள்ளிநாராற்
றொடுத்த பூவைப் பெற்றான் - எ - று.

பாடினி   இழைபெற்றாள்,   பாணன்  பூப்பெற்றான், யான்  அதுபெறு
கின்றிலேனெனப் பரிசில்கடாநிலையாயிற்று;இனி, இவள் பேயாயிருக்கக்
கட்புலனாயதோர்   வடிவுகொண்டு  பாடினாளொருத்தியெனவும்,  ‘இக்
களத்து  வந்தோர்  யாவரும்  பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு
எதிர்ந்து    பட்டோரில்லாமையான்,    எனக்கு   உணவாகிய   தசை
பெற்றிலேன்‘     எனத்     தான்    பேய்மகளானமை    தோன்றப்
பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர்.

‘பாடினிக்கு,.....பாண்மகன்’     என்பது,   ‘அதுவெனுருபுகெடக் குகரம்
வந்தது;   உயர்திணையாகலின்.   பாடினிபாடலுக்கேற்பக்  கொளைவல்
பாண்மகனெனினும்   அமையும்.  எனவும்,  ஆங்கும்  :  அசைநிலை;
பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.

(12) பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.

திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)

பாண்டியன்