புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   315
Zoom In NormalZoom Out

றையொடு   வேண்மாடத்து    மேலிருந்து    உறையூர்   ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது. 

(இ - ள்.)  இவன்  யாரென்று     வினவுவாயாயின்,   இவன்றான்,
புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி பொலிந்த கொளுத்தற
எய்த  அம்புகள் போழப்பட்ட பரந்துயர்ந்த மார்பினையுடைய கூற்றம்
போன்ற    களிற்றின்மேலோன்;    இக்களிறுதான்,   கடலின்கண்ணே
இயங்கும்  மரக்  கலத்தையொப்பவும்  பலமீனினது  நடுவே செல்லும்
மதியத்தை   யொப்பவும்   சுறவினத்தையொத்த  வாண்மறவர்  சூழத்
தன்னை  மருவிய  பாகரை யறியாது மதம்பட்டது; இவன் நோயின்றிப்
பெயர்வானாக;  வயலிடத்து  மயிலுதிர்த்த பீலியை ஆண்டுள்ள உழவர்
நெற்சூட்டுடனே    திரட்டும்    கொழுவிய    மீனையும்   விளைந்த
கள்ளையுமுடைய  மிக்க நீராகிய வேலியையுடைய நாட்டையுடையோன்
- எ - று. 

களிற்றுமிசையோனாகிய  இவன்யாரென்குவையாயின்,  நாடுகிழவோன்;
இவன்    களிறு    மதம்பட்டது;   அதனால்,  இவன்  நோயின்றிப்
பெயர்கவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. 

களிற்றுக்கு  நாவாயோடு  உவமை  எதிர்ப்படையைக் கிழித்தோடலும்,
திங்களோடு   உவமை   வாளோர்   சூழத்  தன்  தலைமைதோன்றச்
செல்லுதலுமாகக் கொள்க. 

தில் : விழைவின்கண் நின்றது. 

பெருநற்கிள்ளி  களிறு   கையிகந்து  பகையகத்துப்   புகுந்தமையான்
அவற்குத்    தீங்குறுமென்று    அஞ்சி   வாழ்த்தினமையால்,   இது
வாழ்த்தியலாயிற்று;  இவற்குத்  தீங்குறின்  நமக்குத் தீங்குறுமென்னுங்
கருத்தால்  நோயிலனாகிப்  பெயர்கவென்றாராயின்,  வாழ்த்தியலாகாது;
துறை, பாட்டுடையானது என்றுணர்க. 

(14) கடுங்கண்ண