ளைப் பொருந்திய பெரிய கைகள் ; புலானாற்றத்தை யுடையவாகிய செவ்வித்தடியைப் பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி அமைத்த ஊனையும் துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயலறியா வாகலான், அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும ! பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும் பொருவார்க்குத் துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையும் உடைய, போரின்கண்ணே மிக்க சேயையொப்பாய்! நின்னைப் பாடுவாருடைய கைகள் - எ - று. |
|
கொளீஇ (13) என்னுமெச்சம் அமைத்தவென்னும் ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்தவெனத் திரித்து, அவ்வூனென ஒரு சுட்டு வருவித்து அதனோடு முடிப்பினும் அமையும். |
|
உண்டு (14) என்பது பொதுவினையன்றேனும் கறியொழிந்த வற்றிற்கெல்லாம் சேறலின், பன்மைபற்றி அமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடுகூடிய சோற்றை உண்டென உரைப்பினும் அமையும்; இதனைப் பொதுவினையென்று உரைப்பாருமுளர். |
|
குரிசில்! பெரும! சேஎய்! வலியவாகும் நின்கை; நிற்பாடுநர்கை தாம் மெல்லியவாகுமெனக் கூட்டுக. |
|
இனி, மாதாங்கவும் (7) என்பதற்கு அகழியைக் கடக்கப்பாய்தற்குக் குதிரைக்குசையைத் தாங்கி எடுத்துவிடவு மென்றுரைப்பாருமுளர். |
|
பாடுநர் (19) எனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார். |
|
தம் கையின் மென்மையது இயல்புகூறுவார், அரசன்கையின் வலிய இயல்புங் கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று. |
|
 |