புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   317
Zoom In NormalZoom Out

வர்  தேயத்துக்கண்;  அசைந்த  தன்மையோடு பெரிய கழுத்தினையும்
பரந்த   அடியோடு    வெகுட்சி    பொருந்திய  பார்வையினையும்
விளங்கிய  கோட்டினையுமுடைய களிற்றை அப்பகைவருடையனவாகிய
காவலையுடைய     வாவிக்கட்    படிவித்தனை;    அப்பெற்றிப்பட்ட
சினத்துடனே  அதற்கேற்ற செய்கையையுடையை; ஆதலான், விளங்கிய
இரும்பாற்  செய்யப்பட்ட  ஆணியும் பட்டமும் அறைந்த அழகு மிக்க
பலகையுடனே   நிழலுண்டாகிய  நெடிய  வேலை  எடுத்துப்  பகைவர்
ஒள்ளிய  படைக்கலங்களை  யுடைய  நினது விரைந்த தூசிப்படையின்
வலியைக்   கெடுத்தல்வேண்டித்   தம்   ஆசை  கொடுவர  வந்தோர்
அவ்வாசை  பின்  ஒழிய  வசையுண்டாக  உயிர்வாழ்ந்தோர்  பலரோ?
குற்றமில்லாத  நல்ல  தருமநூலினும்  நால்வகைப்பட்ட  வேதத்தினுஞ்
சொல்லப்பட்ட  எய்தற்கரிய மிக்க புகழையுடைய சமிதையும் பொரியும்
முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய்மிக்க புகை மேன்மேற் கிளரப்
பல   மாட்சிமைப்பட்ட   கெடாத   தலைமையையுடைய  யாகங்களை
முடித்துத்  தூண்  நடப்பட்ட  அகன்ற  வேள்விச்சாலைகள் பலவோ?
இவற்றுள்,   யாவையோ   பல?   பெரும!  வார்பொருந்தி  வலித்துக்
கட்டுதலைப்  பொருந்திய  மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய
விறலிபாடும்     மேற்செலவிற்கு      ஏற்ப,     ஆராய்தலமைந்த
வலியையுடையோய்! நினக்கு - எ - று.
 

பூட்டி (2)  என்னும்   வினையெச்சத்திற்கு  உழுதென்னுஞ்சொல்  தந்
துரைக்கப்பட்டது.   நற்பனுவலாகிய  நால்வேதம்  (17)  என்பாருமுளர்.
நற்பனுவல் நால்வேதத்து வேள்வியென இயையும்.
 

பெரும!  மைந்தினோய்!  பாழ்செய்தனை;  தேர்  வழங்கினை;  கயம்
படியினை;  ஆகலின், நினக்கு ஒன்னாராகிய வசைபடவாழ்ந்தோர் பலர்
கொல்? யூபம் நட்ட வியன்களம் பலகொல்? இவற்றுள்,