நிறம் போலத் தோன்ற இடமில்லையாகச் சென்று விடும் எல்லையில்லாத படையினையும், துணைப்படை வேண்டாத போர்வெற்றியினையும், புலால்நாறும் வாளினையும் பூசிப்புலர்ந்த சாந்தினையும், முருகனது வெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப்பொருந்திய தலைவ! ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலையும் குளிர்ச்சியையுடைய பகன்றையையும் பழத்தையுடைய பாகலையும் உடைத்தாகிய கரும்பல்லது பிறிதுகாடறியாத பெரிய மருதம் பாழாகக் காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை ஊட்டி அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய, நின்கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப்படப் பொருதன, பெரும! நின்னுடைய களிறுகள் - எ - று. தோல்பரப்பி (2) என்பது முதலாகிய வினையெச்சங்களை இறுக்கும் (9) என்னும் பெயரெச்சவினையொடு முடித்து, அதனைத் தானை (9) என்னும் பெயரோடு முடிக்க. பாகற் (14) றண்பணை (16) என இயையும். எல்லுப்பட இட்ட சுடுதீ (7) என்றதனைத் தானைக்கு அடையாக்குக. கவர்பூட்டி (4) என்பதற்கு விரும்பிக் கொள்ளையூட்டியெனவும், புலங்கெட (9) என்பதற்கு நாடழியவெனவும், புலவுவாள் (11) என்பதற்குப் புலாலுடைய வாளெனவும் உரைப்பினும் அமையும். குருசில்! பெரும! நீ அமர்செய்ய, நின் களிறு ஓராங்குமலைந்தனவென வினைமுடிவுசெய்க. பாகல் : பலாவென்று உரைப்பாருமுளர். ஏம நன்னாடு ஒள்ளெரியூட்டி யென்றதனால், இது மழபுலவஞ்சி யாயிற்று. (17)
தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோறிருத்திப்
படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழி
|