புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   322
Zoom In NormalZoom Out

யா பல கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவுசெய்க. 

விளங்கு   பொன்னெறிந்த  (12)   என்பதற்கு   கண்ணாடி   தைத்த
எனினும்  அமையும்.  தார் முன்பு தலைக்கொண்மார் (14) என்பதற்குத்
தாரை வலியால் தலைப்படவெனினும் அமையும். 

புரையுநற்பனுவல் (16 - 7) என்பதூஉம் பாடம். 

யா பலவென இவ்விரண்டின் பெருமையும் கூறியவாறு. 

இவை  எப்பொழுதுஞ்  செய்தல்  இயல்பெனக்  கூறினமையின், இஃது
இயன்மொழியாயிற்று.

(16) வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் கனிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்

புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே. 

திணை - வஞ்சி; துறை - மழபுலவஞ்சி. 

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங்கண்ணனார்
பாடியது. 

(இ - ள்.)   போரிற்கு     நன்மையையுடையவாகிய      விரைந்த
குதிரையுடனே  முகில்போலும் நிறத்தையுடைய  பரிசையைப்  பரப்பி,
முனையிடங்   கலங்க  மேற்சென்று,  அவரது  நெல்விளைகழனியைக்
கொள்ளையூட்டி,     மனையிடத்து    மரமே    விறகாகக்    காவற்
பொய்கைகளின்   நீரிலே   களிற்றைப்   படிவித்து,  விளக்கமுண்டாக
இடப்பட்ட  நாடுசுடுநெருப்பினது  ஒளிதான்  விடுகின்ற  கதிரையுடைய
ஞாயிற்றினது செக்கர்