காவல குலையிறைஞ்சிய கோட்டாழை அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானற் றெண்கழிமிசைச் சுடர்ப்பூவிற் றண்டொண்டியோ ரடுபொருந மாப்பயம்பின் பொறைபோற்றாது நீடுகுழி யகப்பட்ட பீடுடைய வெறுழ்முன்பிற் கோடுமுற்றிய கொல்களிறு நிலைகலங்கக் குழிகொன்று கிளைபுகலத் தலைக்கூடியாங்கு நீபட்ட வருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிதுசென்று மலர்தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின் உண்டாகிய வுயர்மண்ணும் சென்றுபட்ட விழுக்கலனும் பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும் ஏந்துகொடி யிறைப்புரிசை வீங்குசிறை வியலருப்பம் இழந்துவைகுது மினிநாமிவன் உடன்றுநோக்கினன் பெரிதெனவும் வேற்றரசு பணிதொடங்குநின் ஆற்றலொடு புகழேத்திக் காண்கு வந்திசிற் பெரும வீண்டிய மழையென மருளும் பஃறோன் மலையெனத் தேனிறை கொள்ளு மிரும்பல் யானை உடலுந ருட்க வீங்கிக் கடலென வானீர்க் கூக்குந் தானை யானாது கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப இடியென முழங்கு முரசின் வரையா வீகைக் குடவர் கோவே. திணை - வாகை; துறை - அரசவாகை; இயன்மொழியுமாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை வலிதிற் போய்க் கட்டிலெய்தினானைக் குறுங்கோழியூர் (பி - ம். குறுங்கோளியூர்) கிழார் பாடியது. (இ - ள்.) தென்றிசைக்கட் கன்னியும் வடதிசைக்கண் இமயமும் கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக நடுவு பட்ட நிலத்துக் குன்றும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர் ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூறத் தீத்தொழிலைப் போக்கிக் கோலைச் செவ்விதாக்கி ஆறிலொன்றாகிய இறையை உண்டு |