நடுவுநிலைமையைச் செய்து தடையின்றாக உருண்ட ஒளியையுடைய சக்கரத்தால் நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே! குலைதாழ்ந்த கோட்புக்க தெங்கினையும் அகன்ற கழனியையும் மலையாகிய வேலியையும் நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும் தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடைய குளிர்ந்த தொண்டியிலுள்ளோருடைய அடுபொருந! யானை படுக்குங்குழிமேற் பாவின பாவைத் தன் மனச் செருக்காற் பாதுகாவாது ஆழத்தால் நெடிய குழியின்கண்ணே அகப்பட்ட பெருமையையுடைத்தாகிய மிக்கவலியையுடைய கொம்பு முதிர்ந்த கொல்லுங்களிறு அதன் நிலைசரியக் குழியைத்தூர்த்துத் தன்னினம் விரும்பத் தன்னினத்திலே சென்று பொருந்தினாற்போல, பொறுத்தற்கரிய வலியாற் பகையை மதியாது நீயுற்ற பெரியதளர்ச்சி நீங்கப் பிறிதொரு சூழ்ச்சியாற் போய்ப் பலரும் மகிழப்பரந்த உரிமையையுடைய இடத்தின் நின் சுற்றத்தார் பலர்க்கு நடுவே உயர்த்துச் சொல்லப்படுதலால், நீ செழியனாற் பிணிப்புண்பதற்கு முன்பு நின்னால் அழிக்கப்பட்டுப் பின்பு தம்மரசுவௌவாது நின்வரவு பார்த்திருந்த அரசர் நமதாய் இவனாற்கொள்ளப்பட்டு உண்டு அடிப்பட்டுப்போந்த மேம்பட்ட நிலமும் இவன்பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும் கிடைத்தலுண்டாம், இவனது நெஞ்சு நமக்கு உரித்தாகப்பெறினென நினைந்தும், நின்வரவு பார்த்திராது தம்மரசுவௌவிய பகைவர் எடுத்தகொடியையுடைய உயர்ந்த மதிலையும் மிக்க காடும் அகழும் முதலாய காவலையுடைய அகலிய அரணினையும் நாம் இனி இழந்து தங்குவேம், இவன் நம்மை வெகுண்டு பார்த்தான் மிகவென நினைந்தும் பகைவேந்தர் ஏவல் செய்யத்தொடங் |