புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   325
Zoom In NormalZoom Out

ரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 

திணை - பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

(இ - ள்.) ஒலிக்கின்ற கடலானது   முழுதுஞ்   சூழப்பட்டுப்  பரந்து
கிடக்கின்ற    அகன்ற    உலகத்தைத்   தமதுமுயற்சியாற்   கொண்டு
தம்முடைய   புகழை   உலகத்தின்கண்ணே  நிறுத்தித்  தாமேயாண்ட
வலியோருடைய   வழித்தோன்றினோய்!   ஒன்றைப்   பத்துமுறையாக
அடுக்கப்  பட்டதாகிய கோடி என்னும் எண்ணினைக் கடையெண்ணாக
இருத்திய   சங்கு   முதலாகிய  பேரெண்ணினை  உடைத்தாக  நினது
வாழ்நாள்;  நீரின்கண்ணே  உறத்தாழ்ந்த  குறிய காஞ்சியினது பூவைக்
கவரும்  இனமாகிய  வாளையினையும் நுண்ணிய ஆரலினையும் பரிய
வராலினையும்   நிறமுடைய  கெடிற்றினையும்  உடைத்தாகிய  குழிந்த
கிடங்கினையும்    வானமஞ்சும்    திருந்திய    நெடிய   மதிலையும்
உடைத்தாகிய  வளவிய  பழைய  ஊரினையுடைய  வலியவேந்தே!  நீ
போகக்கடவ  மறுமையுலகத்தின்கண் நுகருஞ் செல்வத்தைவிரும்பினும்,
உலகத்தைக்   காப்பாரது   தோள்வலியைக்கெடுத்து   நீ  ஒருவனுமே
தலைவனாதலை   விரும்பினும்,  மிக்க  நல்ல  புகழை  இவ்வுலகத்தே
நிறுத்துதலை   விரும்பினும்  அவ்வேட்கைக்குத்  தக்க  செய்கையைக்
கேட்பாயாக,    இப்பொழுது;   பெரியோய்!   நீரை   இன்றியமையாத
உடம்பிற்கெல்லாம்   உணவு  கொடுத்தவர்கள்  உயிரைக்  கொடுத்தார்;
உணவை   முதலாகவுடைத்து   அவ்வுணவால்   உளதாகிய   உடம்பு;
ஆதலால்,   உணவென்று   சொல்லப்படுவது   நிலத்தோடுகூடிய  நீர்;
அந்நீரையும்  நிலத்தையும்  ஒருவழிக்  கூட்டினவர்கள்  இவ்வுலகத்து
உடம்பையும்   உயிரையும்   படைத்தவராவர்;  நெல்  முதலாயவற்றை
வித்திமழையைப்  பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்ற
நிலத்தை    உடைத்தாயினும்   அது   பொருந்தியாளும்   அரசனது
முயற்சிக்குப்